காய்கறி, மிளகாய் வளர்த்து அறுவடை செய்த நடிகை..!
நடிகைகளில் எல்லோருமே கொரோனா ஊரடங்கில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் உடற்பயிற்சி செய்து தங்களை ஃபிட்டாக வைத்துக் கொண்டனர். ஆனால் சில நடிகைகள் மற்ற வீட்டுப் பணிகளிலும், புதிதாக கற்பதிலும் கவனம் செலுத்தினர். குறிப்பாக நடிகை சமந்தா புதிதாக யோகா பயிற்சி, ஆரோக்கிய சமையல், பால் கனி கார்டனிங், காஸ்டியூம் டிசைனிங் என பிஸியாகி விட்டார். சமையல் கலையில் தற்போது கைதேர்ந்து நிபுணர் ஆகிவிட்டார். ருசியான சமையல் செய்து சக தோழிகளுக்குப் பகிர்ந்து வருகிறார். தவிர ஆடை டிசைனிங் உள்ளிட்ட சில பணிகளை இணைத்து நிறுவனம் ஒன்றும் தொடங்கி விட்டார்.
சமந்தாவைப் போலவே நடிகை சமீரா ரெட்டி தன்னை பிஸியாக வைத்திருக்கிறார். வாரணம் ஆயிரம், வேட்டை, வெடி போன்ற படங்களில் நடித்தவர் சமீரா. இவர் திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டிலானார். இரண்டு குழந்தைகளுக்குத் தாய் ஆகி விட்டார். பலரும் மாடித் தோட்டம், பால் கனித் தோட்டம் வைத்து அவர்களே சில கீரை, காய்கறிகளை வளர்க்கின்றனர். அதுபற்றி அறிந்து நாமும் அதுபோல் வீட்டுக்குத் தேவையான காய் கறிகளை வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார் சமீரா. அதை நிறைவேற்றியும் காட்டி விட்டார். வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோட்டத்தில் இவர்க் காய் கறிகள் பயிரிட்டார். அத்துடன் பச்சை மிளகாயும் பயிரிட்டார். தற்போது சில காய் கறிகள், பச்சை மிளகாய் வளர்ந்து சமையலுக்குத் தயார் ஆகிவிட்டது. அதைக்கண்டு பூப்படைந்த சமீரா தனது பிள்ளைகளுடன் சென்று மிளகாய் பறித்து வந்தார்.
இது பற்றி சமீரா கூறும்போது. சிறிய இடத்தில் தேவையான காய்கறிகள் பயிரிட்டேன். அது தற்போது வளர்ந்திருப்பதைப் பார்க்கும்போது எவ்வளவு மனநிறைவாக இருக்கிறது. அதை கையால் அறுவடை செய்வதை அனுபவிக்கவே சுகமாக உள்ளது. நான் மும்பை பொண்ணு. இதுபோன்ற விஷயங்களில் சுத்தமாக அனுபவம் கிடையாது. ஆனாலும் மாடித் தோட்டம். பால்கனி தோட்டம் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஜன்னலில் கூட சிலர் வளர்ப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோன்ற முயற்சிதான் நான் இப்போது செய்தது. இந்த அனுபவத்தை உங்களுக்கு சொல்வதற்காக மிகவும் சந்தோஷம் அடைகிறேன்.