பயிர்காப்பீட்டு தொகையாக ரூ.5க்கு செக்: விவசாயிகள் அதிர்ச்சி
திண்டுக்கல்லில், பயிர்காப்பீட்டுத் தொகையாக ரூ.5க்கு செக் கொடுத்த அதிகாரிகளால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்ததால் பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகிபோனது. இதனால், விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். எனவே, மத்திய அரசு தேசிய பயிர்காப்பீடு திட்டம் கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் மூலம், ரூ.610 முதல் ரூ.2000 வரை பயிர்காப்பீடு செய்தனர். இதில், இயற்கை பேரிடர் மற்றும் வற்ட்சி காரணமாக நஷ்டமடைந்தால் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை காப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் கூறப்பட்டன.
இந்நிலையில், சத்திரப்பட்டி, போடுவார்பட்டி, வேலூர் அன்னபட்டி, வீரலப்பட்டி, விருப்பாச்சி, த.புதுக்கோட்டை, மஞ்சநாயக்கன்பட்டி, கொத்தயம், தேவத்தூர், 14 புதூர், கள்ளிமந்தயம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், தட்டப்பயிறு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருந்தனர்.
ஆனால், மழை இல்லாததால் பயிர்கள் கருகி போயின. இதனால், பயிர்காப்பீட்டு தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, போடுவார்பட்டி பகுதியில் உள்ள «தியமயமாக்கப்பட்ட வங்கியில் இதற்கான காசோலை வழங்கப்பட்டது.
ஆனால், பயிர்காப்பீட்டு தொகையாக பல விவசாயிகளுக்கு ரூ.5, ரூ.10, ரூ.3, ரூ.2 என குறைந்த தொகையே வழங்கி உள்ளனர். இதனால், விவசாயிகள் அதிர்ச்சியையும், வேதனையையும் அடைந்துள்ளனர்.
இந்த காசோலையை வங்கியில் மாற்றுவதற்கே ரூ.150 வரை செலவாகும் நிலையில், தாங்கள் பிச்சைக்காரர்களை விட கேவலமாக நடத்தப்படுகிறோம் என ஆதங்கத்துடன் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com