பிரபல இசை அமைப்பாளர் திடீர் மரணம்...!
கன்னடத்தில் மறக்கமுடியாத பல படங்களுக்கு இசை அமைத்தவர் ராஜன் நாகேந்திரா. கடந்த 50 ஆண்டுகளாக 375 படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். சகோதரர்களான இவர்களில் நாகேந்திரா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாககேந்திரா மரணம் அடைந்தார். பிறகு ராஜன் தனது மகனுடன் சேர்ந்து இசை அமைத்து வந்தார். கன்னடம் தவிர தமிழ், தெலுங்கு, துலு, மலையாளம் மற்றும் இந்தி, சிங்கள மொழிப் படங்களுக்கும் இசை அமைத்துள்ளனர்.ராஜன் நேற்று திடீரென்று காலமானார். அவருக்கு வயது 87.
இதுபற்றி ராஜனின் மகன் அனந்த் கூறும்போது,என் தந்தை இரைப்பை கோளாறுக்கு ஆளானார். வெளிப்படையாக, அவர் அடிக்கடி இரைப் தொடர்பான வலியைப் பற்றிக் கூறுவார். நேற்று தூங்கச் சென்ற போது கூட அதைப் பற்றி கூறி வலி அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். இரவில் அவர் மரணம் அடைந்தார் என்றார்.2000 ஆம் ஆண்டில் தனது சகோதரரை இழந்த பிறகு ராஜன் தனது மகன் அனந்த் உடன் பணிபுரிந்தார். ராஜனும் நாகேந்திராவும் மிகப் பெரிய மற்றும் மிக வெற்றிப்படங்களுக்கு இசை அமைத்தவர்கள். குறிப்பாக 1970களில் அவர் புகழுடன் இருந்தார்கள். நயாவே தேவாரு, காந்ததா குடி, தேவர குடி, பாக்யவந் தாரு, எராடு கனாசு, நா நின்னா மாரியலாரே, நா நின்னா பிடலாரே, ஹோம்பிசிலு, பேயாலு தாரி, பாவனா கங்கை மற்றும் கிரி கன்யே போன்ற பல படங்கள் இவர்கள் இசை அமைப்பில் பிரபலம் ஆனது.
இந்த சகோதரர்கள் கன்னட திரையுலகின் கல்யான்ஜ் - ஆனந்த்ஜி என்று அழைக்கப் படுகிறார்கள், மேலும் அவர்கள் பல தசாப்தங்களாக மதிப்புமிக்க கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் உட்பட அவர்களின் படைப்புகளுக்குப் பல விருதுகள் வென்றுள்ளனர். இவர்களது வெற்றிகரமான கன்னட பாடல்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன.