ஷங்கரின் ரஜினி பட வழக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி.
டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் எந்திரன். இதில் ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இந்நிலையில் எந்திரன் பட கதை தான் எழுத்திய ஜூகுபா என்ற சைன்ஸ் பிக்ஸ்ன் கதையை காப்பியடித்து எடுக்கப்பட்டது என எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கு தொடர்ந்ததுடன், காப்புரிமையை (ராயல்டி) மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கை தொடர்ந்தார்.
மனுவில் அவர் கூறும்போது, ஜூகிபா என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் 1996 ம் ஆண்டு தொடர் எழுதினேன். என் அனுமதி பெறாமல், அந்த கதையை எந்திரன் என்ற தலைப்பில் இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக எடுத்தார். இது சட்டபடி உரிமையை மீறியதாகும் எனவே ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்நிலையில். எந்திரன் படம் மீதான வழக்கையும் தன் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது, அதனை விசாரித்த ஐகோர்ட்டு வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இதையடுத்து ஷங்கர் மற்றும் தரப்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.எந்திரன் படத்தின் கதை தன்னுடையது என்று ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து மனுவில் கோரப்பட்டிருந்தது. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த ஷங்கர் மனு மீதான விசாரணை இன்று நடந்தது. ஆனால் அவரின் கோரிக்கையை, நிராகரித்து வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து உத்தரவிட்டதுடன் மனுவை தள்ளுபடி செய்தது.