ரிவர்சாங் ஹோம் ஆடியோ இந்தியாவில் அறிமுகம்.
வீடுகளில் பயன்படுத்த ஏற்ற புதிய ஒலிபெருக்கிகளை ரிவர்சாங் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு சப்ஊஃபர் கொண்ட 2.1 சேனல், 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 1 சப்ஊஃபர் கொண்ட 4.1 சேனல் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
2.1 வகையானது மல்டிமீடியா ஸ்பீக்கர்கள் கொண்டது. 7 X 2 W கொண்ட 3 அங்குல ஸ்பீக்கர்கள் இரண்டும் 15 W 4 அங்குல சப்ஊஃபர் ஒன்றும் இருக்கும். வைப் எஸ் தயாரிப்பு ரூ.4,299/- விலையிலும் வைப் என் தயாரிப்பானது ரூ.6,699/- விலையிலும் கிடைக்கும். 4.1 வகையானது 7X4 W கொண்ட 3 அங்குல ஸ்பீக்கர்கள் நான்கும், 25 W 5.25 அங்குல சப்ஊஃபர் ஒன்றும் கொண்டது. ரிவெர்ப் எக்ஸ், ரிவெர்ப் புரோ, ரிவெர்ப் எஸ், ரிவெர்ப் எச்டி மற்றும் ரிவெர்ப் மேக்ஸ் ஆகிய தயாரிப்புகள் கிடைக்கின்றன. இவற்றின் விலை ரூ.5,149/- முதல் ரூ.7,299/- வரை உள்ளது.
2.0 வகையில் 4 அங்குல டவர் ஸ்பீக்கர்கர்கள் இரண்டும், 90W மற்றும் 90 மிமீ மேக்னட் கொண்ட 6 அங்குல ஊஃபர்கள் இரண்டும் இருக்கும். ஃபியூஷன் எம், ஃபியூஷன் எஸ் மற்றும் ஃபியூஷன் எக்ஸ் தயாரிப்புகள் கிடைக்கிறது. இவற்றின் விலை ரூ.6,899/- முதல் ரூ.14,999/- வரை இருக்கும்.