தமிழக முதல்வரின் தாயார் மரணம்..
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்குச் சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று அதிகாலை 12.20 மணிக்கு மரணம் அடைந்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலையில் தூத்துக்குடிக்குச் செல்வதாக இருந்தது. மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு பணிகளையும், வளர்ச்சித் திட்டப் பணிகளையும் முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இன்று தூத்துக்குடி மாவட்டத்திலும், நாளை கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களிலும் ஆய்வு செய்வதாக இருந்தது. இந்தப் பயணங்களை ரத்து செய்து விட்டு, முதல்வர் உடனடியாக சேலத்திற்குச் சென்றார்.சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகாவில் உள்ள முதல்வரின் சொந்த ஊரான சிலுவம்பாளையம் கிராமத்தில் தவசியம்மாளின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.