கேமராவை அணைத்தபடி காதலில் விழுந்த ஹீரோ..
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நடிக்கவில்லை என்ற நிலை கோலிவுட்டை பொருளாதாரா ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் தொழிலாளர்கள் முதல் ஹீரோக்கள் வரை பாதித்திருக்கிறது. எந்நேரமும் படப்பிடிப்பில் சத்தத்தின் மத்தியில் இருந்து பழகிய நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் சத்தமே இல்லாமல் தனி அறையில் முடங்கி இருந்து தவித்தனர். அந்த தவிப்பை நடிகர் தனுஷ் வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.சினிமா கேமரா ஒன்றைக் கட்டி அணைத்து அதன் மீது தலையைச் சாய்த்தபடி, ஒரு உண்மையான காதல், உன்னை ரொம்பவே மிஸ் செய்கிறேன் என இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு மெசேஜ் பகிர்ந்திருக்கிறார்.
இதற்கிடையில் பாலிவுட் படமான அட்ரங்கி ரே படத்திற்காக தனுஷ் மதுரையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளார். படத்தின் செட்களில் இருந்து நடிகரின் படங்கள் வைரலாகின. அவரை மீண்டும் படப்பிடிப்பில் சந்தித்த பல ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் ஷூட்டிங்கை தவற விட்டார் என்பதை மக்களுக்குக் காட்டும் ஒரு சிறப்புப் படத்தை அட்ராங்கி ரே புகைப்படத் தொகுப்பிலிருந்து தனுஷ் பகிர்ந்துள்ளார்.தனுஷ் கேமராவை அணைத்துக்கொண்டிருக்கும் படத்தை சமூக ஊடக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். தனுஷுக்கு நடிகைகள் அதிதி ராவ் ஹைத்ரி, வரலட்சுமி சரத்குமார், ராஷி கண்ணா ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
அட்ராங்கி ரே படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். இப்படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தனுஷ் ஜகமே தந்திரம் படம் திரைக்கு வரத் தயாராக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்ப ராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.மேலும் தனுஷ், கர்ணன்; என்ற படத்தில் நடிக்கிறார்.