கண்ணம்மாதான் என் உயிர் மூச்சு.. உருகும் பிரபல நடிகர்..
79, 80களில் புன்னகை அரசி என்ற பட்டம் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு சொல்லப்பட்டு வந்தது. 90களில் சினேகா வந்த பிறகு புன்னகை அரசி பட்டத்தை ரசிகர்கள் இவருக்கு வழங்கினார்கள்.சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதைச் சினேகா குறைத்துக்கொண்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தனுஷ் நடித்த பட்டாஸ் படத்தில் நடித்தார். அப்படத்தில் நடிக்கும்போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஆனாலும் கதாபாத்திரத்துக்காக அடிமுறை என்ற பயிற்சியை கற்றுக்கொண்டு படத்தில் சில ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்தார்.
பிரசன்னா ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் நடித்து வருவதால் வில்லன் மற்றும் மாறுபட்ட வேடங்களில் அவருக்கு வாய்ப்புகள் தொடர்கிறது. சினேகாவுக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.பிரசன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து சொன்னார். அவர் கூறும் போது,வருடங்கள் வேகமாகக் கடந்து போகலாம் ஆனால் என் உலகம் இன்னும் நான் அவரை (சினேகா) பார்த்த நொடியில் அவரிடம் காதலில் விழுந்த தருணத்திலேயே நிற்கிறது. அவரைவிட எனக்கு வேறு எதுவும் சிறப்பாகத் தெரியவில்லை. இத்தனை வருடம் எனது காதல் பற்றி நிறையச் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் அதெல்லாமே அவர் மீது நான் கடல் அளவுக்கு வைத்திருக்கும் காதலின் ஒரு துளி தான். என்னுடைய ஆன்மாவின் ஒவ்வொரு துளியிலும் நீ கலந்திருக்கிறாய். என்னுடைய தந்திரங்கள், குறுக்கு வழிகளையும் பொருத்துக் கொண்டு இன்னும் அதிகமாக என் மீது அன்பு காட்டுவதற்கு நன்றி. நீதான் என் உயிர் மூச்சு. கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா (சினேகா)இவ்வாறு பிரசன்னா கூறி உள்ளார். சினேகாவை பிரசன்னா செல்லமாக கண்ணம்மா என்று தான் அழைப்பார். மேலும் அவரது பிறந்த நாளுக்காக எஸ் என்ற எழுத்தின் மேல் கிரீடம்போல் அலங்கரித்து கேக் ஒன்றை சினேகாவுக்கு வாங்கி அவருடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார் பிரசன்னா.