நண்பனை காண சென்ற 17 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... கூட்டு பலாத்காரத்தில் சிக்கி சிதைந்த சிறுமி.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருகின்ற காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் அதிகமாக தலை விரித்து ஆடுகிறது. பெண்களுக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு இல்லை. தற்பொழுது உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவத்தால் பெண்களுக்கு கல்லூரி வளாகத்தில் கூட சரியான பாதுகாப்பு இல்லை. உத்திரபிரதேசத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்றது. அந்த விடுதியில் தங்கி இருந்த நண்பனை காண சென்ற 17 வயது சிறுமி திடீரென அதே பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 6 மாணவர்களால் வலுக்கட்டாயமாக விடுதிக்குள் இழுத்து சென்றனர். அப்பொழுது சிறுமியின் நண்பன் காப்பாற்ற முயன்ற போது அவரை சரமாக தாக்கி கீழே தள்ளியுள்ளனர். சிறுமியை விடுதிக்குள் தூக்கி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை சக மாணவர்கள் வீடியோவில் பதிவு செய்து அப்பெண்ணிடம் இங்கு நடந்ததை வெளியே சொன்னால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். அந்த பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த போலீஸ் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் 6 பேர் சேர்ந்த கும்பலின் மீது வழக்கு தொடுத்து தீவீரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.