ரூ.38000 தொட்ட தங்கம்! இன்றைய தங்கத்தின் விலை 13-10-2020

கடந்த நான்கு நாட்களாகப் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கத்தினால் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறையத் தொடங்கி உள்ளது. இது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கடன் தவணை மீதான வட்டிக்கு வட்டி வழக்கு, அமெரிக்க அதிபர் தேர்தல் போன்ற புறக் காரணிகளால் தங்கத்தில் விலையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதாக வரத்தகத்தினர் கூறுகின்றனர். எனவே ஆபரணத்தங்கத்தின் மதிப்பு நேற்று ஒரு கிராம் விலை ரூ.4884 க்கு விற்பனையானது. ஆனால் இன்று ஆபரணத்தங்கத்தின் விலையானது கிராமிற்கு ரூ.19 விலை குறைந்துள்ளது, எனவே ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூபாய் 4865 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1 கிராம் -48658 கிராம் ( 1 சவரன் ) - 38920

தூய தங்கத்தின் விலையும் இந்த வாரம் ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. நேற்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5128 க்கு விற்பனையானது. இன்று ஒரு கிராம் தூய தங்கம் ரூ.20 குறைந்து, கிராமானது ரூ‌.5108 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம் (24k)

1 கிராம் - 51088 கிராம் - 40864

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலையானது நேற்றைய விலையில் 1.10 பைசா விலை குறைந்து, கிராம் 66 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூபாய் 66000 க்கு விற்பனையாகிறது.

More News >>