யூ டியூப் இயக்குனர், நடிகைக்கு செம அடி.. அடியாட்களுடன் வந்து தாக்கிய பெண்ணால் பரபரப்பு.
நடிகை வனிதா, பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்துக்கொண்ட விவகாரத்தில் அவரை நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர். இந்த மோதல் போலீஸ் வரை சென்றது. சூர்யாதேவி கைதாகி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். திடீரென்று வனிதாவிடம் சமாதானம் ஆனார் நாஞ்சில் விஜயன்.
கொரோனா ஊரடங்கில் கடந்த 3 மாதமாக இப்பிரச்சனை ஓய்ந்திருந்தது. தற்போது புது பிரச்னை எழுந்துள்ளது. நாஞ்சில் விஜயன் வீடு வளசரவாக்கம் வீரப்பா நகரில் உள்ளது. அங்கு நடிகை சீபாவுடன் யூ டியூப் நிகழ்ச்சிகாக நாஞ்சில் விஜயன் படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. அப்போது வீட்டுக்குள் அடியாட்களுடன் புகுந்த சூர்யாதேவி அங்கிருந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. நாஞ்சில் விஜயன், சீபா இருவருக்கும் செம அடி விழுந்ததில் இருவரும் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசில் நாஞ்சில் விஜயன் புகார் அளித்திருக்கிறார். அதில், சூர்யாதேவி அடியாட்களுடன் வந்து தங்களை தாக்கி விட்டு சென்றார் என குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தானும் நடிகை சீபாவும் காயம் அடைந்த வீடியோவை விஜயன் வெளியிட்டிருக்கிறார்.
https://www.instagram.com/p/CGNyGvuFh-W/