குடும்பத்துடன் அஜித் ரசிகருடன் சிவகார்த்திகேயன் - மெர்சல் திருவிழா
‘மெர்சல்’ திரைப்படத்தை அவரது ரசிகர்களையும் தாண்டி பல திரைத்துறை சார்ந்த பிரபலங்களையும் காத்திருக்க வைத்தது.
படம் வெளியான முதல் நாளே பல திரை உலக நட்சத்திரங்கள் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் மெர்சல் படத்தின் டிக்கட்டுடன் பதிவு செய்தனர்.
இந்நிலையில், 'தல' அஜீத்’மெர்சல்’ திரைப்படத்தை பாரிஸ் நகரில் தன்னுடைய குடும்பத்துடன் பார்த்துவிட்டார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ‘மெர்சல்’ திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார். திரையரங்கில் ‘மெர்சல்’ திரைப்படத்தை பார்த்து வெளியே வரும் வேளையில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுளளது.