கீர்த்தி சுரேஷ் பற்றின சுவாரஸ்யமான தகவல்!! ஒரு படத்திற்கு 1 கோடி.. அப்போ மொத்த சொத்தின் மதிப்பு ??
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் கீர்த்தி சுரேஷ். இவரின் முக பாவனை, நடிப்பு திறமை ஆகியவையால் தமிழர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். நடிப்பின் திறமை வைத்து மட்டுமே தன் வாழ்க்கையில் மேல் மேலும் வளர்ந்து வருகிறார். இவருக்காக தமிழர்களின் தனி ரசிகர்களின் பட்டாளமே உள்ளது. 'மகாநதி' திரைப்படத்தில் நடித்த தனது அசத்தலான நடிப்பினால் தேசிய விருதை தட்டி சென்றார். இவரை தவிர சாவித்திரி கதாபாத்திரத்தில் வேறு யாராலும் அவ்வளவு தத்துரூபமாக நடித்திருக்க முடியாது. இந்த படத்தில் இருந்து தான் சினிமா திரையுலகில் ஒரு அந்தஸ்த்தை பிடித்தார் என்று கூறலாம்.. இவர் சாமி 2,சர்க்கார் போன்ற ஹிட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இவர் ஒவ்வொரு திரைப்படத்திலும் நடிக்க 1 கோடி சம்பளமாக வாங்குகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அது மட்டும் இல்லாமல் அவர் பயன்படுத்தும் இரண்டு கார்களில் விலை 3.5 கோடி என்று கூறப்படுகிறது. இவரின் முழு சொத்து 15 கோடியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.