ஆன்லைன் வகுப்பை துண்டிக்காமல் ஆசிரியர்கள் அடித்த லூட்டி .. இருவரின் வேலைக்கு ஆப்பு வைத்த வீடியோ.
அமெரிக்காவில் ஆன்லைன் வகுப்பை துண்டிக்காமல் இரண்டு ஆசிரியர்களும் பேசிய உரையாடல்கள் யாவும் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் ஆன்லைன் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. இதில் இரண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுத்துள்ளனர். இந்நிலையில் வகுப்பு முடிந்த பிறகு வகுப்பை துண்டிக்காமல் இரண்டு ஆசிரியர்களும் மாணவர்களை பற்றி விமர்சிக்க தொடங்கியுள்ளனர். வகுப்பு துண்டிக்கவில்லை என்பதை அறியாத இருவரும் மாணவர்களுக்கு சுத்தமாக அறிவில்லை என்று மாணவர்களை இழிவாக திட்டினார்கள். டிக் டாக் என்றால் ஒரே பட்டனை அழுத்தினால் வேலை சுலபமாக முடிந்துவிடும் ஆனால் தொழில் நுட்பத்தில் வேலை கொடுத்தால் எதுவும் செய்ய தெரியாத முட்டாள்கள் என்று கொடூரமாக பேசி தள்ளியுள்ளார்.
இதனை மாணவர்களின் பெற்றோரில் ஒருவர் இருவரும் பேசியதை பதிவு செய்து பள்ளியின் நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி நிர்வாகம் இருவரையும் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்தனர்.