லட்சுமி மேனன் ஓப்பனாக கொடுத்த காதல் அப்டேட்.. அப்போ சீக்கிரமே டும் டும் டும் தான்..
தனது பள்ளி பருவத்திலே சினிமா உலகில் கால் எடுத்து வைத்தவர் லட்சுமி மேனன். இவரது நடித்த படங்களில் 'கும்கி' திரைப்படம் தான் இவரை யார் என்று தமிழ் சினிமாவிற்கும் மக்களுக்கும் அறிமுகப்படுத்தியது. இவரின் முகம் குடும்ப பெண்ணான கிராமத்து சாயலில் உள்ளதால் கொம்பன், சுந்தரப்பாண்டி போன்ற திரைப்படங்கள் இவருக்கு கச்சிதமாக பொருந்தியது. தனது சிறு வயதிலே நடிப்பு திறமையை வெளி உலகத்துக்கு காட்டியவர்.சில நாட்களுக்கு முன்பு இவர் பிக் பாஸில் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் லட்சுமி மேனன், எனக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள விருப்பம் இல்லை என்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியை இழிவாக பேசியதாலும் தவிர்க்க முடியாத சர்ச்சையில் மாட்டினார்.
இன்ஸ்டாவில் மக்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து வந்த நிலையில் ஒருவர் லட்சமி மேனனிடம் நீங்கள் சிங்கிளா என்ற கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் சிங்கிள் இல்லை என்றும் ஹார்டுடன் வெட்க படும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி மேனன் ஒரு பிரபல நடிகரை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கள் வெளியாகியது. ஆனால் இவர் அதை பெரிதாக கண்டுகொள்ளாமல் படத்தில் நடிக்க ஆர்வம் செலுத்தி வந்தார். ஒருவேளை அவராக இருக்குமோ என்று சந்தேங்கள் எழுந்துள்ளது.