வீட்டுக்குள் நுழைந்த அரியவகை பாம்பு வைரலாகும் இரட்டை தலை பாம்பின் வீடியோ..
அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் அரிய வகையான இரட்டை தலை பாம்பு நுழைந்ததை அடுத்து அந்த வீட்டில் இருந்த பெண் தனது போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா நாட்டில் உள்ள வடக்கு கரோலினா பகுதியில் ஜென்னி வில்சன் என்ற பெண் வசித்து வருகிறார்.அவரது வீட்டில் நேற்று இரட்டை தலை கொண்ட அரிய வகை பாம்பு நுழைந்துள்ளது.முதலில் இதனை கண்டு பயந்த பெண் தன் மருமகனை கூச்சல் போட்டு உதவிக்கு அழைத்தார்.ஆனால் போக போக இரட்டை தலை கொண்ட பாம்பினை கண்டு வியக்க ஆரம்பித்துள்ளார்.அது மிகவும் குட்டியாகவும் அழகாகவும் இருந்தது.அந்த பெண் அப் பாம்பின் க்யூட்டான அசைவுகளை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.வீடியோவை கண்டு அனைவரும் வியந்ததால் இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து வருகின்றனர்.அந்த பாம்பை கொல்ல மனம் வராததால் அந்த பெண் பாம்பை ஒரு ஜாடிக்குள் பிடித்து அறிவியல் ஆய்வாளர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் இது அரிய வகை பாம்பு என்றும் இது லட்சத்தில் ஒன்று தான் இருக்கும் என்றும் இரட்டை தலை பாம்பு பற்றின பல சுவாரசியமான தகவல்களை தெரிவித்தனர்.மேலும் இந்த பாம்பை வைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்படும் என்பதையும் அறிவித்தனர்.