லிங்காயத் சமூகத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது கர்நாடக அரசு!

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே லிங்காயத் சமுதாயத்துக்கு சிறுபான்மை அந்தஸ்தை வழங்கியது கர்நாடக அரசு.

தங்களை இந்து மதத்தில் இருந்து பிரித்து தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என கர்நாடக மாநிலத்தில் பரவலாக வசிக்கும் லிங்காயத் சமூகத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து ஆராய்வதற்காக, நாகமோகன் தாஸ் தலைமையில் தனி கமிட்டியை கர்நாடக அரசு அமைத்திருந்தது. இந்நிலையில், நாகமோகன் தாஸ் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில் லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அம்மாநில அமைச்சரவை அங்கீகரித்தது. அத்துடன், மத்திய அரசுக்கும் அம்மாநில அரசு பரிந்துரை செய்தது.

இதற்கிடையில், கர்நாடக அரசின் முடிவை வீர சைவ பிரிவினர் ஏற்க மறுத்து வருகின்றனர். இந்நிலையில், லிங்காயத் சமுதாயத்திற்கு கர்நாடக அமைச்சரவை மைனாரிட்டி அந்தஸ்தும் வழங்கியுள்ளது.

மைனாரிட்டி சமூகமாக லிங்காயத் மதம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கு சிறப்பு சலுகைகளை அதில் உள்ளவர்கள் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>