தமிழக முதல்வரின் தாயாருக்கு அமித்ஷா இந்தியில் இரங்கல்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழியில் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார்.
முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் (வயது 93) உடல் நலக்குறைவு காரணமாக சேலத்தில் தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் எடப்பாடியிலுள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. முதல்வரின் தாயார் மறைவுக்கு பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதம் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது.
இந்தி மொழியில் கடிதம் அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்தி மொழியில் எழுதப்பட்ட கடிதத்தை அமித் ஷாவுக்கே திருப்பி அனுப்புங்கள் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொது செயலாளர் வைகோ முதல்வரை கேட்டுக்கொண்டுள்ளார்.