குமுதா ஹாப்பி அண்ணாச்சி!! பிரம்மாண்ட வைல்ட் கார்டு எண்டரி கொடுத்த அச்சுமா!! இனிமேல் பிக் பாஸ் கலகட்டப்போகுது..
பிக் பாஸ் வீட்டில் புதுவரவாக தொகுப்பாளர் அர்ச்சனா வருகை தந்துள்ளதாக இன்றைய ப்ரோமிவில் வெளியானது.
பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. இந்நிலையில் ஒரு வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் மந்தமாக தான் இருந்தது என்று கூறலாம். அனிதா மற்றும் மொட்டை சுரேஷின் சண்டையை வைத்தே ஒரு வாரத்தின் கதை இழுக்கப்பட்டது. நடுவில் ரியோ மற்றும் சனம் இருவரும் ப்ரோமிவில் வர சில பல தில்லு முல்லு வேலைகளை பார்த்தனர். பிக் பாஸ் வீட்டை இன்னும் குதூகலம் செய்யவும் மக்களை கவரும் வகையிலும் புதிய ப்ராபேர்ட்டி பிக் பாஸ் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் இன்று வெளியான ப்ரோமோவில் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா வைல்ட் கார்டு எண்டரியாக பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார். மேளதாளத்தோடு நடனம் ஆடிக்கொண்டே 100% பாசிட்டிவ் சக்தியோட வருகிறார். சக போட்டியாளர்களும் அர்ச்சனாவை மார்பில் அணைத்தபடி மிகவும் சந்தோஷமாக வரவேற்பு தருகின்றனர்.
அர்ச்சனா என்பவர் பிரபல தொலைக்காட்சியில் நீண்ட நாள் புகழ் பெற்ற தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது வேலை மற்றவரின் முகத்தில் சிரிப்பை வர வைக்க எது வேணும்னாலும் செய்ய கூடிய தன்மையை உடையவர். அச்சுமா என்றால் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி அனைத்தையும் மக்களை ரசித்து பார்க்க வைப்பது அவரது குறும்பு, மென்மையான குரல், பாசிட்டிவ் எனர்ஜி ஆகியவை தான் காரணம்.. இவர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதால் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.
வருகின்ற காலகட்டத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிகழப்போகின்ற திருப்பங்கள், சுவாரசியங்கள் முதலியவற்றை காத்து இருந்து பார்ப்போம்..