75 ரூபாய் நாணயம் வெளியிடுகிறார் பிரதமர் மோடி

ஐக்கிய நாடுகள் சபை உணவு விவசாய நிறுவனத்தின் 75வது துவக்க விழாவையொட்டி பிரதமர் மோடி 75 ரூபாய் மதிப்புள்ள நாணயம் ஒன்றை வெளியிட உள்ளார்.உணவு விவசாய நிறுவனத்தின் 75வது ஆண்டு விழா வரும் 16ஆம் தேதி டெல்லியில் நடக்க உள்ளது இந்த நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் எழுபத்தைந்து ரூபாய் நாணயத்தைப் பிரதமர் மோடி அந்த விழாவில் வெளியிடுகிறார்.

விவசாயம். சத்துணவு. வறுமை ஒழிப்பு. சத்துக் குறைவு இன்மையை உறுதி செய்தல் ஆகிய பணிகளுக்கு இந்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.இம்மாதம் 16 ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் உணவு விவசாய நிறுவனத்திற்கு 75 வயது நிறைவு பெறுகிறது. உணவு விவசாய நிறுவனத்தின் பணி நாடுகளைப் பொறுத்தமட்டில் மகத்தான குறிப்பிடத்தக்க பணியாகும். உணவு விவசாய நிறுவனத்துடன் இந்திய அரசு சரித்திர பூர்வமாக இணைந்து பணியாற்றி வருகிறது.

இந்திய ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் பினாயக் சென் என்பவர்1956 முதல் 1967 ஆம் ஆண்டு வரை உணவு விவசாய நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரலாக இருந்தார். அவர் பணியில் இருந்த காலத்தில் தான் உலகில் வறுமையை ஒழிக்க உலக உணவுத் திட்டம் துவக்கப்பட்டது. அந்த உலக உணவுத் திட்டத்துக்கு 2020 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பரிந்துரை காரணமாகக் கடந்த 2013 ஆம் ஆண்டு சர்வதேச பருப்பு வகைகள் ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்த இரு கோரிக்கைகளையும் உணவு விவசாய நிறுவனம் அங்கீகரித்ததுடன் ஆதரவும் தந்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் உரிய அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு போஷன் அபியான் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பலன் பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய தானிய வகைகள் மக்களுக்குத் தேவையான குறிப்பிட்ட சத்து வகைகளை போதுமான அளவில் வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் மரபணு திருத்தம் செய்யப்பட்ட எட்டு தானியங்களின் 17 வகைகளைப் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியில் நாட்டுக்குப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மத்திய வேளாண் அமைச்சர் அமைச்சர். நிதி அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள், அபிவிருத்தித் துறை அமைச்சர் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

More News >>