`ஐபிஎல் போட்டிகளில் ஸ்டோக்ஸ் கலக்குவார்!- பட்லர் நம்பிக்கை

இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் அந்த அணியின் விக்கெட் கீப்பருமான ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் சென்ற முறை ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியது போல இந்த முறையும் கலக்குவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் உலக அளவில் முன்னணி ஆல்-ரவுண்டராகவும் திகழும் பென் ஸ்டோக்ஸ், சிறிது காலம் ஓய்விலிருந்து சர்வதேச கிரிக்கெட்டுக் திரும்பியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வரும் அவர், அடுத்த மாதம் நடக்கப்போகும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடப் போகிறார்.

அவர் இன்னும் ஃபுல் ஃபார்முக்கு திரும்பவில்லை என்று பலர் சொல்லி வரும் நிலையில், சக வீரரான ஜோஸ் பட்லர் விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். ஸ்டோக்ஸ் குறித்து பட்லர், `கடந்த சில மாதங்களாக ஸ்டோக்ஸ் ஓய்விலிருந்தாலும், தற்போது மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கியுள்ளார். இந்த ஓய்வு அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை கண்டிப்பாக பாதிக்காது.

ஏனென்றால், ஸ்டோக்ஸுக்கு இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தெரியும். அவர் இங்கிலாந்துக்காக தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். அடுத்த மாதம் தொடங்கப்போகும் ஐபிஎல் தொடரிலும் அவர் கலக்குவார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் அதிரடி காட்டியது போல இந்தாண்டும் சரவெடி கிளப்புவார்’ என்று நம்பிக்கை ததும்ப தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>