பாகிஸ்தானில் உள்ள 133 இந்தியர்கள் அக்டோபர் 19ல் நாடு திரும்ப அனுமதி.
பாகிஸ்தானில் உள்ள இந்திய நாட்டை செந்தார் 133 பேர் அக்டோபர் 19ஆம் தேதி தாய்நாடு திரும்ப உள்ளனர் என்று இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டிற்கு சென்ற இந்தியர்கள் சிக்கி தவித்தனர். சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்ட நிலையில், அவர்கள் இந்தியாவுக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பும் இந்தியர்கள் அனைவரும் வாஹாவிலுள்ள எல்லைச் சாவடிக்கு அக்டோபர் 19ஆம் தேதி வந்து சேரவேண்டும் என்று அறிவித்துள்ளது. வாகா எல்லைச் சாவடிக்கு வந்து சேர்வதற்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை பாகிஸ்தானில் உள்ள இந்தியர்கள் தாங்களே செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தனியாக போக்குவரத்து வசதி செய்து தரப்பட மாட்டாது என்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய விசா உரிமை பெற்ற 363 பேரும் 37 இந்தியர்களும் பாகிஸ்தானிலிருந்து இந்தியா திரும்ப ஏற்பாடு செய்திருப்பதாக கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி ந்திய தூதரகம் அறிவித்தது. அதில் முதல் கட்டமாக தற்போது 133 இந்தியர்கள் நாடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.