இங்கிலாந்து தொடருக்காக ஆயத்தமாகும் கேப்டன் கோலி!
இங்கிலாந்து தொடருக்காக இந்தியக் கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஆயத்தமாகி வருகிறார்.
இந்திய அணி வருகிற ஜூன் மாதத்தில் 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து தொடருக்காக ஒரு பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில் கவுன்டி கிரிக்கெட் விளையாட உள்ளார் கேப்டன் கோலி.
"கவுண்டி தொடரில் நிச்சயமாக கோலி விளையாடுகிறார். சர்ரே, எஸ்செக்ஸ் போன்ற அணிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் கருதப்படுகிறது. இதற்கு மேல் ஏதும் சொல்ல இயலாது" என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தொடருக்குப் பின்னர் இந்தியக் கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. ஆனால், இந்தத் தொடரில் கேப்டன் கோலி பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com