அடல்ட் படத்துக்காக ஒடிடி தளம் தொடங்கிய இயக்குனர்..
சினிமா தியேட்டர்கள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டத்திலிருந்து தற்போது 6 மாதம் ஆகி விட்டது. எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.பிரபலங்களின் படங்கள் ஒடிடி தலத்தில் விற்கப்படுகின்றன மற்ற படங்களை ஒடிடி தளங்கள் வாங்குவதில்லை. ஆனால் அடல்ட் படத்துக்கென்று ஒடிடி தளங்களில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது அதற்கு சப்ஸ்கிரைபர்களும் இருக்கிறார்கள். தியேட்டரில் வெளியிட வேண்டுமென்றால் அதற்கு சென்சார் சான்றிதழ் வேண்டும் ஆனால் ஒடிடி தளத்துக்கு அது தேவை இல்லை.
இதனால் ஆபாச காட்சிகள் எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் ஆட்டம் போடுகிறது.அந்த கால சில மலையாள படங்கள் கற்பழித்தவனைப் பழி வாங்கும் கதை என்று ஒரே கன்டன்ட்டை வைத்துக் கொண்டு ஆபாசத்தை அள்ளிக் குவித்தனர். ஷகிலா போல சில கவர்ச்சி நடிகைகள் அதற்காவே நடித்தனர். கடந்த பல வருடங்களாக அந்த நிலை மாறி மலையாள படங்கள் போல் நல்ல படங்கள் வருவதில்லை என்றளவுக்கு அந்த திரையுலகை மாற்றி அமைத்திருக்கின்றனர்.
அந்த கால மலையாள திரையுலகம்போல் சில இயக்குனர்கள் தமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகை மாற்ற முயற்சித்து வருகின்றனர். சந்தோஷ் பி ஜெயகுமார் என்ற இயக்குனர் இரண்டாம் குத்து என்ற அடல்ட் படத்தை எடுப்பதாக அறிவிப்பதுடன் ஆபாசமான காட்சிகளுடன் டிரைலர், புகைப்படங்கள் வெளியிட்டார். அதற்கு இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று போலீசிலும் புகார் தரப்பட்டது. அதன் பிறகே சந்தோஷ் ஜெயகுமார் பின்வாங்கினார். ஆபாச போஸ்டர் வெளியிட்டதற்கு மன்னிப்பு கேட்டார். அப்போது கூட ஆபாசப் படம் எடுக்க மாட்டேன் என்று அவர் கூறவில்லையே என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் பகிர்ந்தனர்.
தெலுங்கில் தற்போது ராம் கோபால் வர்மா அடல்ட் கன்டென்ட் படங்களை வெளியிடுவதற்காக ஆர் ஜி வி வேர்ல்டு தியேட்டர் என்ற பெயரில் ஓடிடி தளத்தையே தொடங்கி இருக்கிறார். ஏற்கனவே கிளைமாக்ஸ், நேக்கட் போன்ற படங்களை வெளியிட்டிருக்கிறார். தற்போது லஸ்ட்: தி மட்டர் ஸ்டோரி என்ற மர்டர் கிரைம் என்ற பெயரில் புதிய படம் எடுத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை தற்போது ரிலீஸ் செய்திருக்கிறார். அதில் ஆபாசம் கொடி கட்டி பறக்கிறது. நேகட் படத்தில் நடித்த ஸ்ரீ ரபாகா இதிலும் நடித்திருக்கிறார். இது நெட்டிஸன்களின் கடும் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது.