மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகும் கொரிய நாடுகள்... அமெரிக்காவுக்கு பின்னடைவா?

தென் கொரியாவும் வட கொரியாவும் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போவதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது.

வட கொரியா, அணு ஆயுதச் சோதனையால் ஈடுபட்டதால், அதற்கும் தென் கொரியாவுக்கும் கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு நிலவி வந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், வட கொரியா, `அமைதி நோக்கி திரும்புவோம்’ என்று தென் கொரியா நோக்கி அறைகூவல் விடுத்தது.

இதையடுத்து, இரு நாட்டு பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், `கொரிய நாடுகள் அமைதி பாதையில் சென்று மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும்’ என்று இரு நாட்டு சார்பிலும் அறிக்கை விடப்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான பனிப் போரும் முடிவுக்கு வந்தது.

மே மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அவர்களை சந்திக்கப் போகிறார். இந்நிலையில், கொரிய நாடுகள் இரண்டும், `இன்டர் கொரியன் சம்மிட்’ ஒன்றை நடத்த உள்ளது. இந்தப் சம்மிட்டில், இரு நாட்டுக்கு இடையில் நிலுவையில் இருக்கும் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நெருக்கம் வட கொரியா, தென் கொரியா நட்புறவை பலப்படுத்திவிடும் என்று தெரிகிறது. இதனால், அமெரிக்காவுக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

More News >>