`அரசியல் சாசனத்தையே மாற்றத் துடிக்கிறது பாஜக!- கொதிக்கும் ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `பாஜக, இந்திய அரசியல் சட்ட சாசனத்தையே மாற்ற துடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. எனவே, அங்கு களத்தில் இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது அவர் பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ராகுல், `என்னிடம் இருந்து நீங்கள் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பாஜக என்ன நினைத்தாலும், எவ்வளவு துடித்தாலும் இந்திய அரசியல் சட்ட சாசனத்தை மாற்ற முடியாது. அதற்கு அவர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் நானும் காங்கிரஸும் எங்கள் முழு பலத்தை உபயோகப்படுத்தித் தடுப்போம்.
அம்பேத்கரின் கடும் முயற்சியால் உருவான இந்திய அரசியல் சட்ட சாசனத்தை மாற்ற யாராலும் முடியாது’ என்று சரமாரியாக பாஜக-வை தாக்கி பேசியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com