கொரோனாவில் மீண்டு வீடு திரும்பிய பாப்புலர் நடிகை..

கோவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று இன்னமும் இந்தியாவில் கட்டுக்குள் வரவில்லை. யாரை வேண்டுமானாலும் தாக்கும் நோயாகக் கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.திரையுலகினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், விஷால், எஸ்.எஸ்.ராஜமவுலி, சுமலதா, நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா அர்ஜூன் என வரிசையாக கொரோனா தாக்கியது. அவர்கள் சிகிச்சைக்கு பிறகு குணம் அடைந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வந்தார் நடிகை தமன்னா. யோகா, உடற் பயிற்சி செய்துக்கொண்டிருந்தவர் பின்னர் காட்டுப் பகுதிக்கு டிரெக்கிங் சென்றார். இந்நிலையில் தமன்னா பெற்றோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதன் பிறகு குணம் அடைந்தனர். அப்போது பரிசோதனை செய்ததில் தமன்னாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.சமீபத்தில் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் ஐதராபாத்தில் நடந்த வெப் சீரிஸ் படப்பிடிப்பில் பங்கேற்க வந்தார் தமன்னா. அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்குத் தொற்று அறிகுறி இருந்தது தெரிந்தது.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் இரண்டு தினங்களுக்குப் பிறகு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதாகச் சொல்லி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி மும்பை புறப்பட்டுச் சென்றார். அங்குத் தனி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். அதில் அவர் குணம் அடைந்தார். மேலும் 14 நாட்கள் தனிமையில் இருந்தவர் வீடு திரும்பினார். அவரை பெற்றோர் கட்டி அணைத்து வரவேற்றனர். முககவசத்துடனே தமன்னா வீட்டுக்குள்ளும் சுற்றித் திரிகிறார்.

More News >>