`ஏன் புலுகுகிறீர்கள்..?- அமித்ஷாவை வறுத்தேடுத்த சந்திரபாபு நாயுடு
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாஜக-வின் தேசியத் தலைவர் அமித்ஷா எழுதிய கடிதத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், `எதற்காக பொய் சொல்கிறீர்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திராவுக்கு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியை சமீபத்தில் முறித்தது சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி. இதையடுத்து அமித்ஷா, சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், `தெலுங்கு தேசம் கட்சியின் இந்த முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
இது ஆந்திராவின் வளர்ச்சியை முன்னிலப்படுத்தாமல் அரசியல் காய் நகர்த்தல்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது’ என்று குற்றம் சாட்டினார் அமித்ஷா. இதற்கு சந்திரபாபு நாயுடு, `அமித்ஷா, அவரது கடிதத்தில் மத்திய அரசு ஆந்திராவுக்கு அதிக நிதி ஒதுக்கியதாகவும் அதை நாங்கள் சரிவர பயன்படுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
அவர் ஆந்திர அரசுக்கு திராணி இல்லை என்று கூறுகிறார். ஆனால், எங்கள் மாநிலத்தில் நல்ல வளர்ச்சி உள்ளது. ஜிடிபி, விவசாயம் மற்றும் பிற துறைகளில் இந்தியாவின் ஏனைய மாநிலங்களை விட முன்னிலை வகிக்கிறோம். ஆனால், எதற்காக நீங்கள் பொய் உரைக்கிறீர்கள்?’ என்று அமித்ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். சந்திரபாபு நாயுடுவின் இந்த பதிலடி பாஜக வட்டத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com