கலெக்டர் ஆபிசிலேயே ரோடு சரியில்லை குமரி மாவட்ட எம். எல். ஏக்கள் குற்றச்சாட்டு
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் வருகைக்காக போடப்பட்ட தார் சாலை படுமோசமாக உள்ளதாக எம்எல்ஏ க்கள் குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகைக்காக தருவதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. முதல்வரின் நிகழ்ச்சிக்காக நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக தார் ரோடு போடப்பட்டது. இந்த ரோடு தற்போது சிதலமடைந்து மோசமான நிலையில் உள்ளது. கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த நாகர்கோவில் எம்எல்ஏ சுரேஷ் ராஜன், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஆகியோர் இங்கேயே இப்படி தரமற்ற முறையில் ரோடு உள்ளதை சுட்டி காட்டினர் . மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே இந்த நிலை என்றால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் சாலை பணிகள் எப்படி தரமாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினர் . இந்த நிகழ்வு அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.