நூற்றுக்கு நூறு பெற்ற ஒரிசா மாணவன்.. நீட் தேர்வில் இதுவரை இல்லாத சாதனை...!

முதல்முறையாக நீட் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அளப்பரிய சாதனை படைத்திருக்கிறார் ஒரிசாவைச் சேர்ந்த மாணவன் ஒருவர்.சோயெப் அப்தாப் என்ற அந்த மாணவர் நடந்து முடிந்த நீட் தேர்வில் இறங்குவதற்கு 770 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். இந்தியாவில் இதுவரை எந்த மாணவரும் நீட் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றதில்லை முதன்முறையாக அந்த சாதனையைப் படைத்திருக்கிறார் சோயெப் அப்தாப்.இப்படி ஒரு சாதனை நீட் தேர்வில் இதற்கு முன்னர் ஒருபோதும் சாதிக்கப்படவில்லை.தேசிய தகுதி மற்றும் நுழைவு சோதனை (நீட்) முடிவுகள் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இதில் அகில இந்தியத் தரவரிசை (ஏ.ஐ.ஆர்) பட்டியலில் முதல் இடத்தை இடத்தைப் பிடித்தது சோயெப் அப்தாப். மொத்தம் 720 மதிப்பெண்களில் 720 புள்ளிகளைப் பெற்று வரலாறு படைத்தார்.இந்த ஆண்டு நீட் 2020க்கு 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.18 வயதான சோயேப் ராஜஸ்தான் கோட்டாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து பயிற்சி பெற்றார். படிப்புக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க 3 வருடங்கள் வீட்டை விட்டு விலகி இருந்திருக்கிறார்.

டெல்லியில் இருந்து தான் மருத்துவக் கல்லூரியில் படிக்க விரும்புவதாகவும் வருங்காலத்தில் இருதயநோய் நிபுணராக வருவதே தனது லட்சியம் என்றும் சோயேப் தெரிவித்திருக்கிறார்.பரீட்சைகளுக்குத் தயாராவதற்குத் தினமும் 10 முதல் 12 மணி நேரம் வரை படிப்பேன். அதுவும் மூன்று வருடகாலம் வீட்டிற்குச் செல்லாமல் விடுதியில் தங்கிப் படித்ததுதான் தனது சாதனைக்குக் காரணம் என்றும் சொல்லி இருக்கிறார்.

'ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட்' என்ற பயிற்சி நிறுவனம், ஷோயெப்பின் படங்களை முடிவு அறிவிப்பதற்கு முன்னதாக ட்வீட் செய்துள்ளது, ஏனெனில் மாணவர் முழு மதிப்பெண்களைப் பெறலாம் என்று ஏற்கனவே கணித்து வைத்திருந்தோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

More News >>