தி.நகர் சரவணா ஸ்டோர்ஸ்க்கு வெடிகுண்டு மிரட்டல்: வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓட்டம்
தி.நகர் சரவணா ஸ்டோருக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தி.நகர் என்றாலே கூட்டம் என்று ஆகிவிட்டது. சாதாரண நாட்களில் கூட தி.நகர் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். குறிப்பாக, ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல சரவணா ஸ்டோர்ஸ் கடையில் இன்று மக்கள் கூட்டம் வழக்கம் போல் காணப்பட்டது.
இந்நிலையில், மாலை நேரத்தில் கடைக்கு மர்ம நபர்கள் போன் செய்து வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த கடை நிர்வாகத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கடையில் இருந்த வாடிக்கையாளர்களை வெளியே அனுப்பினர். வெடிகுண்டு என்றதும் மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு கடை முழவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலால் தி.நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com