பிரபல நடிகைகள் போட்டோவை காட்டி பல லட்சம் மோசடி..

பணமோசடி பல வழிகளில் நடக்கிறது. இணைய தள மோசடி, கிரெடிட், கார்ட். டெபிட் கார்ட் மோசடி என ஆன்லைன் மோசடிகள் தினம் தினம் அரங்கேறுகிறது. சிலவற்றைக் கண்டறிந்தாலும் பல மோசடிகள் கண்டு பிடிக்கப்படாமலே இருக்கிறது. தற்போது நூதனமான புதுவகை மோசடி நடக்கிறது. தேசிய வேலை வாய்ப்பு உறுதி அட்டை (ஜாப் கார்ட்) மோசடி மூலமாக அரங்கேறி உள்ளது. அதுவும் பிரபல நடிகைகள் போட்டோ ஒட்டி நடந்துள்ள மோசடி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் ஜிர்ன்யா மாவட்டத்தின் செயலாளர் மற்றும் வேலை வாய்ப்பு உதவியாளர் சர்பஞ்ச் என்பவர் பிபர்கேடா நகர பஞ்சாயத்துத் தொழிலாளர்கள் புகைப்படத்தை நீக்கிவிட்டு அவர்கள் புகைப்படத்துக்குப் பதிலாக இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே மற்றும் ஜாக்கு லின் பெர்னாண்டஸ் ஆகியோர் படத்தை ஏற்கனவே இருந்த ஒரிஜினல் புகைப்படங்களை நீக்கிவிட்டு தேசிய வேலை வாய்ப்பு உறுதி அட்டையில் ஒட்டினார். சம்பந்தப்பட்ட அட்டைதாரர்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப் போலி வேலை வாய்ப்பு உறுதி அட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

மோனு துபே என்பவரின் வேலை வாய்ப்பு அட்டையில் தீபிகா படுகோனின் புகைப்படத்தைப் பயன்படுத்தினார். சம்பந்தப்பட்ட பெண் வேலைக்குச் செல்லவில்லை, ஆனால் அவரது பெயரில் ஒரு போலி தேசிய வேலை வாய்ப்பு உறுதி அட்டையைப் பயன்படுத்தி ரூ 30,000 மோசடியாக பணம் பெறப்பட்டுள்ளது.மற்றொரு பயனாளியான சோனுவும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் புகைப்படத்துடன் அதேபோல் மோசடி செய்திருக்கிறார்.

இதுபோல் 10க்கும் மேற்பட்ட அட்டைகளில் நடிகைகளின் படத்தை ஒட்டி மோசடி நடந்துள்ளது. இதுபோல் லட்சக்கணக்கான பணம் மோசடியாகப் பெறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உண்மையிலேயே பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் தங்களுக்குப் பணம் வராத நிலையில் ஆன்லைனில் தங்களது பணம் எப்போது கிடைக்கும் என்று தேடிய போது நடிகைகள் போட்டோ ஒட்டி போலியான அட்டைகள் பயன்படுத்தி அவர்களின் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணைக்கு மாவட்ட பஞ்சாயத்துத் தலைமை நிர்வாக அதிகாரி கவுரவ் பெனால் உத்தரவிட்டுள்ளார்.

More News >>