ஓசூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : 2 லட்சம் ரூபாய் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மேஜைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்தனர்.தமிழக-கர்நாடக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூந் ஜுஜுவாடி என்ற இடத்தில் வெளி மாநிலங்களில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் வாகனங்களைச் சோதனை செய்யவும் , தற்காலிக பெர்மிட் வழங்கவும் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே சிப்காட் வளாகத்தின் அருகே தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்ய, தற்காலிக பர்மிட் வழங்கவும் ஒரு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே இரு மாநிலங்களுக்கு இடையே அதிகபட்ச வாகனங்கள் கடப்பது இந்த சோதனைச் சாவடிகள் வழியாகத்தான். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சோதனைச் சாவடிகளைக் கடந்து செல்கின்றன .
இந்த நிலையில் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. கிருஷ்ண ராஜன் தலைமையிலான ஒரு குழுவினர் இன்று அதிகாலை ஓசூர் இந்த சோதனை சாவடிக்கு வந்தனர் வந்தனர்.வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரும் சோதனைச் சாவடியில் நடத்திய சோதனையில் மேஜைக்கு அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத பணம் ரூ 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் சுப்புரத்தினம்,உதவியாளர் ராமலிங்கம் இருவரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது