தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடிவடிக்கை: செங்கோட்டையன் எச்சரிக்கை
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையின் பேசியதாவது: ஏழை குழந்தைகளுக்கான 25 சதவீத இட ஓதுக்கீட்டை செயல்படுத்தாத தனியார் பள்ளிகள் இருந்தால் அதை அரசின் கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். தனியார் பள்ளிகளின் கட்டணத்தை சீர்செய்யும் பணிகள் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற்று வருகிறது.
இருப்பினும், தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடடிக்கை எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டு முறையாக செயல்படுத்தி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com