தொடரும் நீட் தேர்வு தில்லுமுல்லு! அம்பலமாகும் பாஜகவின் அட்டூழியம்!

கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தால் நாடே முழு முடக்கத்தில் இருந்தபோது, நீட் தேர்வை நடத்தியே தீர வேண்டும் என்று மத்திய அரசும், நீதிமன்றமும் ஒற்றைக்காலில் நின்றது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 13 ல் நடைபெற்றது. ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் தமிழக அரசும் எவ்வளவு போராடியும் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியவில்லை. கடந்த ஆண்டு 138997 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்தாண்டு 121617 மாணவர்கள் தான் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தனர்.

நீட் தேர்வு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பெறச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனாலும் ஆளுநரின் ஒப்புதல் பெறாததால் இன்னும் இந்த தீர்மானம் நிலுவையிலேயே உள்ளது.

இந்நிலையில் நேற்று 2020 ம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்தேறியுள்ளது. இது மத்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாகத் திரிபுரா, உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தின் நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு குழப்பங்களையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தாண்டு திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வுக்கு 4273 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 3536 பேர் நீட் தேர்வை எழுதி இருந்தனர். ஆனால் தேர்வு முடிவில் 88889 பேர் தேர்ச்சி பெற்றதாக வெளியிட்டுள்ளது.உத்திர பிரதேசத்தில் தேர்வு எழுதிய 156992 பேரில் 7323 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் தேர்ச்சி விகிதம் 60.79 சதவிகிதம் எனத் தேசிய தேர்வு கழகம் வெளியிட்டுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தில் 12047 பேர் தேர்வெழுதினர். ஆனால் தேர்ச்சி பெற்றவர்களாக 37301 பேர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

தேர்வெழுதியவர்களின் எண்ணிக்கையை விடத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாதிரியான தேர்வு முறைகள் அவசியம் தானா? எனப் பலவேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இது பாஜக அரசுக்கு மேலும் பல நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>