பிக்பாஸ் வீட்டில் அரசியல் பேச கமல் திட்டம்.. மூத்த குடியான போட்டியாளர் யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் பிக்பாஸ்4வது சீசன் நடத்தி வருகிறார். இதில் நடிகை ரேகா உள்ளிட்ட 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். போட்டியாளர்களிடையே தற்போது போட்டி மனப்பான்மை அதிகரித்து வருகிறது. ஆனால் அப்ராணி போல் சூப்பர் சிங்கர் ஆஜித் மட்டும் பேசிக்கொண்டிருக்கிறார். நான் நானாகத் தான் இருப்பேன் என்னை நான் மாற்றிக்க மாட்டேன் என்று ஆஜித் கூறியதற்கு கேப்ரில்லா ஒரு வித்தியாசமான லுக் கொடுத்தார்.

மொட்டை சுரேஷசை கண்டதும் ஒரு சில போட்டியாளர்கள் பயந்து ஒதுங்கினார்கள். நடிகர் ரியோ ராஜ் மட்டும் அவருக்கு அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறார். இதுவரை மொட்டை சுரேஷை யாரும் அப்படிக் கூப்பிடவில்லை ஆனால் கேப்ரில்லா அவரை, தாத்தா என்று அழைத்து மூத்த குடியில் சேர்த்துவிட்டார். ஆனால் அதை சுரேஷ் கண்டு கொள்ளாமல் வேறுமாதிரி கேப்ரில்லாவிடம் போக்கு காட்டி மறுபடியும் தன்னை தாத்தா என்று கூறாதபடி பார்த்துக்கொண்டார்.

இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை பிக்பாஸில் சந்திக்க உள்ளார். கடந்த வாரம் பேசும்போதே, தலைவரைத் தேர்ந்தெடுக்கும் போது பார்த்து ஓடு போடுங்கள் என்று போட்டியாளர்களுக்கும் சொன்னார். ரசிகர்களைப் பார்த்தும் சொன்னார். அத்துடன் நான் அரசியல் தான் பேசுகிறேன் என்றும் உறுதி செய்தார். தமிழக சட்ட மன்ற தேர்தல் சில மாதங்களில் நடக்க உள்ளதால் பிக்பாஸ் மேடையை அரசியல் களமாகவும் கமல் பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.

தமிழக தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதா? தனித்துப் போட்டியிடுவதா?என்பது குறித்து நேற்று கட்சி நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவு செய்யும் அதிகாரத்தை செயற்குழுவிடமிருந்து தீர்மானமாகக் கமல் பெற்றார். இது அவருக்கு புது தெம்பை அளித்திருக்கிறது. அதே தெம்புடன் இன்று பிக்பாஸ் வரும் கமல் போட்டியாளர்கள் செய்துவரும் அரசியலை பற்றி புட்டு வைத்துத் நிஜ அரசியல் கருத்துக்களையும் அதிரடியாகத் தெரிவிப்பார் என்று பிக்பாஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் கமலின் கட்சி தொண்டர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News >>