குறும்படத்தை காப்பி அடித்த பிரபல இயக்குனர்.. கதாசிரியர் பரபரப்பு புகார்..

இரண்டுக்கும் மேற்பட்ட குறும்படங்களைச் சேர்த்து ஆந்தலாஜி என்ற பெயரில் பெரும்படமாக வெளியிடும் பாணி தொடங்கி இருக்கிறது. அமேசான் ப்ரைம் வீடியோவில் 5 பிரபல இயக்குனர்கள் இயக்கிய ஆனந்தாலஜி படம் புத்தம் புது காலை என்ற பெயரில் வெளியானது.இதில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரும் நானும் அவளும் நானும், சுகாசினி மணிரத்னம் இயக்கிய, காஃபி எனி ஒன்?, சுதா கொங்கரா இயக்கிய இளமை இதோ இதோ, ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவான ரியூனியன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மிராக்கிள் ஆகிய ஐந்து குறும்படத்தை ஒன்றாக இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கதாசிரியர், துணை இயக்குனர் அஜன் பாலா தான் இயக்கிய குறும் படத்தை அப்படியே காப்பி அடித்து புத்தம் புது காலை அந்தாலஜி படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:நேற்று என் நண்பர் இலங்கை வேந்தன் போன் செய்து உடனே அமோசானில் புத்தம் புதுக்காலைப் படம் பாருங்கள் எனப் பதட்டத்துடன் சொன்னார் . என்ன எனக் கேட்டபோது அவர் சொன்ன தகவல் ஷாக்காக இருந்தது . அதில் கடைசியாக வரும் மிராக்கிள் படம் அப்படியே நான் நடிக நிலம் நடிப்பு பயிற்சி மாணவர்களுக்காகக் கடந்த வருட இறுதியில் உருவாக்கி கொரானாவால் போஸ்ட் ப்ரொட்க்‌ஷன் தாமதமாகிக் கடந்த மாதம் யூ டியூபில் வெளியானது என சச்சின் கிரிக்கட் கிளப் குறும்படம் இதன் கதையை அப்படியே சுட்டுவிட்டார்கள் என்றார் அவர். நானும் இரவே பார்த்தேன் . என் கதையில் பத்து பேர் அவர்கள் கதையில் இரண்டு பேர். கதைக்களம் பகல் அதில் இரவு. மத்தபடி பேராசை பெருநட்டம் எனும் என் கதைக்கருவும் பணத் தேவைக்குத் தவறு செய்யப் போய் இருக்கும் பணத்தைக் கோட்டை விடுவதுமான கதை அமைப்பும் இறுதியில் டம்மி பணம் எனும் கதையின் முக்கிய திருப்பம் க்ளைமாக்சாக அமைந்திருப்பதும் அப்படியே இருக்கிறது .

படத்தில் நடித்துள்ள பாபி சிம்ஹா என் நட்பு வட்டத்தில் இருப்பவர் . பன்னிரண்டு வருடமாய் நன்கு பழகியவர் . இதைச் சட்டப் பூர்வமாய் எதிர் கொள்ள வழி இருக்கிறதா தெரியவில்லை . ஒரு ஷார்ட் பிலிம் முக்கிய தகுதியே தனித்த ஐடியா தான். இருபது வருடமாய் போராடி படம் இயக்க முடியவில்லை சரி ஒரு ஷார்ட் பிலிமாவது எடுக்கலாம் என்று பார்த்தால் அதையும் உல்டா அடித்து ஓடிடிக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் அளவுக்குத் தமிழில் கதை பஞ்சமா ? எத்தனை சிறுகதைகள் கொட்டிக் கிடக்கிறது எத்தனை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் . இவர்களுக்கு ஏன் ஒரு எழுத்தாளனின் கதையைப் பயன்படுத்தும் எண்ணம் வருவதில்லை சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல. சரி சுட்டார்களே ஒழுங்காகவாவது திரைக்கதை அமைத்தார்களா அதுவும் இல்லை .. ஒரு டயரை திருடப்போகும் வீட்டிலும் சுமந்து செல்லும் லாஜிக் இல்லாத மொக்கை காட்சியெல்லாம் ஒரிஜினலாக சிந்திக்கும் படத்தில் வரவே வராது கீழே என்னுடைய குறும்படத்தின் லிங்க் https://youtu.be/jBisF5iSxnM

இவ்வாறு அஜய்ன பாலா கூறி உள்ளார்.

More News >>