90 வகை பயிற்சிகளை கண்காணிக்கும் கேலக்ஸி ஃபிட்2 அறிமுகம்...!
சாம்சங் ஹெல்த் லைப்ரரியை சார்ந்த முன்வடிவமாக்கப்பட்ட 90 உடற்பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகளைக் கண்காணிக்கக்கூடிய கேலக்ஸி ஃபிட்2 சாதனத்தை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.1.1 அங்குல AMOLED திரையும் 3டி கர்வ்டு கிளாஸும் கொண்ட இச்சாதனம் தரவிறக்கம் செய்யக்கூடிய எழுபதுக்கும் மேற்பட்ட கைக்கடிகார முகங்களைப் பயன்படுத்தக்கூடியதாகும். வியர்வை மற்றும் நீரிலிருந்து பாதுகாக்க விசேஷ ஏற்பாடுகள் கொண்டது. நீந்தும்போது தானாக இயங்கிவிடாமல் தடுக்க பிரத்தியேக பொத்தான் உண்டு. 50 மீட்டர் ஆழம் வரைக்கும் நீரினால் பாதிக்கப்படாது. ஆகவே நீந்தும்போது அணிவதற்கு ஏற்றது.
21 கிராம் மட்டுமே எடை கொண்டிருப்பதால் இரவு, பகல் எந்நேரமும் சிரமமில்லாமல் அணிந்துகொள்ளலாம். 159 mAh மின்கலம் (பேட்டரி) கொண்டது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 15 நாள்களுக்குப் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட வகை பயன்பாடு மட்டும் என்றால் 21 நாள்களுக்கு உபயோகிக்க முடியும்.
கறுப்பு மற்றும் ஸ்கார்லெட் ஆகிய இரு வண்ணங்களிலும் ரூ.3,9993/-விலையில் சாம்சங் கேலக்ஸி ஃபிட்2 கிடைக்கிறது.