ஸ்லீப்பர் செல்கள் வெளியே வராமல் இருக்க காரணம்? - டிடிவி தினகரன் விளக்கம்
சில டெக்னிக்கல் விஷயத்திற்காக ஸ்லீப்பர் செல்கள் வெளியே வராமல் இருக்கிறார்கள் என்றும் இந்த ஆட்சி விரைவில் கவிழும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விழா, மார்ச் 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் பேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்றது. ஓராண்டு சாதனை விழாவில் சாதனை சிறப்பு மலர், சாதனை விளக்கப் படங்கள், புகைப்படத் தொகுப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். இதில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றார்கள்.
இந்நிலையில் இது குறித்து தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “இது இது சாதனை விழா அல்ல. சோதனை விழா. 10, 20 அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களையும், அவர்களது குடும்பத்தையும் வைத்து கொண்டு ஓராண்டு நிறைவு செய்து சாதனை விழா நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி என்று கூறிவரும் இந்த ஆட்சி ஒரு கொடுங்கோல் ஆட்சியாக செயல்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு மாநில அரசுக்களுக்கு மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. குறிப்பாக தமிழகத்திற்கு 90 சதவீத நிதி கிடைக்கவில்லை. இதை பற்றி தமிழக அரசும் வாய் திறந்து பேசவில்லை. திராவிட ஆட்சியில் தான் தனிமனித வருமானம் அதிகமாக இருந்தது. இதனால்தான் மத்திய அரசு வழங்க கூடிய நிதியை குறைத்துள்ளது.
சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது தவறு. நீதிமன்ற தீர்ப்பிலும் இது தவறு என்று தான் வரப்போகிறது. சில டெக்னிக்கல் விஷயத்திற்காக ஸ்லீப்பர் செல்கள் வெளியே வராமல் இருக்கிறார்கள். வாக்கெடுப்பு நடக்கும் போது கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “இந்த ஆட்சி விரைவில் கவிழும். மதவாத சக்திகளோடு எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம். பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள் நாங்களும் ஆள்வோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com