சியோமியை வீழ்த்தி நம்பர் ஒன் ஆனது சாம்சங் : ஸ்மார்ட்போன்கள் விற்பனையில் சாதனை.
ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தையில் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளது. கவுண்டர் பாயிண்ட் என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, இந்தியாவில் முதலிடத்தை சாம்சங் மீண்டும் கைப்பற்றியுள்ளது. சாம்சங் 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் சியோமி யிடம் முதலிடத்தை இழந்தது. சாம்சங் நிறுவனம், 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் மிக உயர்ந்த சந்தைப் பங்கை எட்டியுள்ளது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், இந்தியா குரானா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர் சாம்சங் மீண்டும் உச்சியை நோக்கி பயணித்தது . நாட்டில் சீன பொருட்களுக்கு இருந்த எதிர்ப்பு உணர்வுகள் காரணமாக சாம்சங் இந்த இடத்தை எளிதில் எட்ட முடிந்திருக்கிறது. இந்த எதிர்ப்பையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டு விளம்பரங்களை அளித்ததன் மூலம் சாம்சங் இப்போது 2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மிக உயர்ந்த சந்தைப் பங்கை எட்டியுள்ளது, என்று அந்த அறிக்கை கூறுகிறது.
உலகளவில் எடுத்துக்கொண்டால், சாம்சங் ஹவாய் பிரண்டை வீழ்த்தி மொத்த சந்தையில் 22% பங்கைக் கொண்டு முதலிடத்தைப் பிடித்தது. இது ஏப்ரல், 2020 இல் இந்த நிறுவனத்தின் 20% பங்கை விட 2% அதிகம். மறுபுறம், ஹவாய் நிறுவனத்தின் 2020 ஏப்ரல் மாதத்தில் 21% ஆக இருந்த சந்தைப் பங்கு 2020 ஆகஸ்டில் 16% ஆக குறைந்து. அமெரிக்க வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாக சீன தொலைத் தொடர்பு நிறுவனம் அதன் சந்தைப் பங்கை மேலும் இழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் மற்றொரு சீன பிராண்டான ஷியோமிக்கு இது பொருந்தாது, காரணம் மத்திய கிழக்கு ஐரோப்பாவில் அதன் சந்தைப் பங்கில் குறிப்பிடத்தக்க இடத்தை சியோமி பிடித்திருக்கிறது . ஹூவாய் நிறுவனத்தின் சந்தை பங்கு இழப்பு என்பது சியோமி நிறுவனத்தின் ஆதாயம் என்று தெரிகிறது. 2020 ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆப்பிளின் உலகளாவிய சந்தை பங்கு அப்படியே இருந்தது. உலகளாவிய ஸ்மார்ட்போன் சந்தையில் இந்நிறுவனம் 12% ஆகும். அக்டோபர் 13 ஆம் தேதி ஐபோன் 12 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நவம்பரில் ஆப்பிள் நிறுவனத்திற்கான விற்பனை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.