மணக்கும் வரை விடமாட்டேன் பிக்பாஸ் நடிகை பரபரப்பு.. காதல் மிரட்டல் யாருக்கு?
கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பலர் சினிமாவில் தங்களுக்கென் ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே பங்கேற்றவர் நடிகை ரைசா வில்சன். அதே ஷோவில் நடிகர் ஹரிஸ் கல்யாண் பங்கேற்றார்.
அப்போது இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது, பரவிய வதந்தி இன்னும் அப்படியே நீடிக்கிறது. இருவரும் பியார் பிரேம் காதல், தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்தனர். தற்போது ரைசா, நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கும் எப் ஐ ஆர், கார்த்திக் ராஜு இயக்கும் தி சேஸ், ஜிவிபிரகாஷ் நடிக்கும் காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திசேஸ் படத்தின் போஸ்டரில் ரைசா ஒரு மரத்தில் தலைகீழாக தொங்கிக்கொண்டிருப்பது போல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இன்ஸ்டாகிராமில் அவரது கவர்ச்சியான படங்களை பார்த்து ரசித்த கண்களுக்கு ரைசாவின் தலை கீழ் போஸ் அதிர்ச்சியாக கூட இருந்தது. இன்ஸ்டாகிராமில் தற்போது ஒன்றுக்கு இரண்டு படம் வெளியிட்டு அதற்கு கேப்ஷன் எழுத முடியாமல் தவித்தார் ரைசா. பின்னர் தடலடியாக ரசிகர்களை சூடேற்றும் விதமாக ஒரு கேபஷன் எழுதினார். அதில், இந்த படத்துக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை.
எனவே நீ என்னை கல்யாணம் செய்யும் வரை உன்னை இப்படியே பார்த்துக்கொண்டிருப்பேன் என குறிபிட்டிருக்கிறார். அவரது இந்த அழைப்பு தன்னுடைய ரகசிய காதலனுக்கானது என்று ஒரு சிலர் கமெண்ட் பகிர்ந்தாலும் உங்களை திருமணம் செய்துக்கொள்ள நான் தயார் என பலர் அப்ளிகேஷன் போட்டிருக்கின்றனர்.