மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி!
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் கவர்னர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே நடைபெற்று வரும் பனிப்போர் நாளுக்கு நாள் உக்கிரம் அடைந்து வருகிறது. ஜெகதீப்தங்கர் மத்திய அரசின் ஊதுகுழலாக செயல் பட்டு வருகிறார் என்று திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளும் மாநில அமைச்சர்களும் சாடி வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று மத்திய அரசுக்கு ஜெகதீப்தங்கர் அறிக்கை அனுப்பி உள்ளார். எனவே மம்தா பானர்ஜி அரசு தேர்தல் வரை தொடர்ந்து நீடிக்குமா அல்லது ஓரிரு வாரங்களில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாக்கப்படுமா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சட்டம், ஒழுங்கு சீராகாவிட்டால் மேற்குவங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க தயங்கமாட்டோம் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு மீதான தாக்குதலை மம்தாபானர்ஜி மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். அமித்ஷாவின் இந்த பேட்டியை பா.ஜ.க.வினர் வரவேற்றுள்ளனர். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.