டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு: மேலும் 26 பேர் கைது.
டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடுகள் தொடர்பாக மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி மூலம் வேலைவாய்ப்பு அளிப்பதற்காக நடத்தப்படும் தேர்வுகளில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே 22 பேர் கைது செய்யப்பட்டனர். ராமேஸ்வரம், கீழக்கரை வட்டார தேர்வு மையங்களில் நடந்த குரூப் 4, குரூப் 2 ஏ, விஏஓ தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த விசாரணை இன்னும் நிறைவடையாத நிலையில் கடந்த 2017-இல் நடைபெற்ற குரூப் 2 ஏ தோ்வு முறைகேடு தொடர்பாக 2 தினங்களுக்கு முன்னதாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று மேலும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை டிஎன்பிஎஸ்சி தோ்வு முறைகேடு தொடர்பாக மொத்தம் 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். குரூப்-4, குரூப் - 2ஏ, குரூப்-1, விஏஓ, மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வு ஆகிய 5 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் ய உள்ளன.