வங்கக் கடல் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தென் மாநிலங்கக்களில் கன மழைக்கு வாய்ப்பு.
மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது எனவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தேனி உட்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். எனவே அடுத்த 48 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது ,இது தவிர பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
வரும் அக்டோபர் 20ம் தேதி முதல் 2 நாட்களுக்கு முதல் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானாவில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.