கடையம் அருகே பல லட்சம் ரூபாய் குட்கா பறிமுதல்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தென்மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை , தென்காசி மாவட்டப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, பான்பராக் உள்ளிட்டவைகள் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம் கடையத்தில் கோழி பண்ணை ஒன்றில் போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கடையம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் கடையம் வெய்க்காலிப்பட்டி யைச் சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் மூட்டை மூட்டையாக குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை வஸ்துக்கள் மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்ட இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. கடையம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்களை தேடி வருகின்றனர். இந்த விவகாரத்தில் சில முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பெங்களூருவில் இருந்து திருநெல்வேலி வழியாக கேரளாவிற்கு 2 லாரிகளில் கடத்த இருந்த போதை வஸ்துக்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் தற்போது கடையத்திலும் போதை வஸ்துகள் கோழிப் பண்ணையில் இருந்து பறிமுதல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.