அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை... நீட் தேர்வு மோசடி வழக்கில் புதிய டுவிஸ்ட்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடி நடந்ததாக சில மாதங்களுக்கு முன் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி தனிப்பிரிவு விசாரித்து வந்தது. விசாரணைக்கிடையே, மோசடி செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கிடையே, இது தொடர்பாக மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என 15 பேருக்கும் கைது செய்யப்பட்டூள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கடந்த பிப்ரவரி மாதம், நீட் தேர்வில் மோசடி மூலம் தேர்வெழுதியாக மாணவ, மாணவிகள் 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். இந்தப் புகைப்படங்களை வைத்து அவர்களின் விவரங்கள் வேண்டும் என்று, ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் 10 மாணவ, மாணவிகளின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் இன்று பதில் கொடுத்துள்ளது. இந்தப் பதில், நீட் தேர்வில் மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

More News >>