தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்.

தனியார் நிர்வகிக்கும் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு படிபடையாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்நாட்டு விமான மற்றும் பேருந்துகள் இயங்கி வருகின்றன. சில குறிப்பிட்ட வழித் தடங்களில் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் ரயில் சேவை முழுமையாக இயக்கப்படவில்லை.

தற்போது பொதுமக்களுக்கான சிறப்பு ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயங்குகின்றன. தனியார் பங்களிப்புடன் இயங்கி வரும் லக்னோ – டில்லி மற்றும் அகமதாபாத் – மும்பை தேஜாஸ் ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. பண்டிகைக் காலம் நெருங்கி வருவதால் பயணிகளுக்கு ரயில் சேவை பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதையடுத்து நேற்று முதல் தேஜாஸ் ரயில்கள் மீண்டும் இயக்கத் தொடங்கி உள்ளன . காசி – இந்தூர் இடையில் செல்லும் காசி மகாகால் ரயில் இயங்கவில்லை. இந்த ரயில்களை இயக்க ஐ ஆர் சி டி சி சில வழிமுறைகளை அறிவித்துள்ளது. ரயிலில் ஒரு இருக்கை விட்டு மற்றொரு இருக்கை காலியாக இருக்க வேண்டும்.

ரயில் பெட்டியில் ஏறும் முன் பயணிகள் அனைவரும் தெர்மல் செக் அப் செய்துக் கொள்ள வேண்டும். இருக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது.பயணிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு சானிடைசார், ஒரு முகக் கவசம், ஒரு முகமூடி மற்றும் ஒரு ஜோடி கையுறைகள் வழங்கப்படவேண்டும் . ரயில் பெட்டிகளில் ,சமையல் கூடம் மற்றும் கழிவறை உட்பட அனைத்து பகுதிகளு ம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பயணிகளின் பொருட்கள் மற்றும் கைப்பைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்படும். பயணிகள் தங்கள் மொபைலில் ஆரோக்ய சேது செயலியைத் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ரயில் ஊழியர் கேட்கும் போது அதைக் காட்ட வேண்டும்.

More News >>