ஜம்மு - காஷ்மீர், சீனாவின் பகுதியா? ட்விட்டரை தாளிக்கும் நெட்டிசன்கள்

ஜம்மு - காஷ்மீரை சீன மக்கள் குடியரசின் பகுதியென்று குறிப்பிட்டதால் ட்விட்டர் மீது நடவடிக்கையெடுக்கும்படி சமூகவலைதளங்களில் பயனர்கள் கொந்தளிக்கின்றனர்.

ஆப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் (ஓஆர்எஃப்) என்ற அமைப்பை சேர்ந்த காஞ்சன் குப்தா, ட்விட்டரின் பதிவை குறிப்பிட்டு, "ட்விட்டர் நிறுவனம் புவியியலை மறுசீரமைப்பு செய்து ஜம்மு - காஷ்மீரை சீன குடியரசின் பகுதியாக அறிவித்துள்ளது. இது இந்திய சட்டங்களை மீறுவதாகாதா? அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனம் சட்டத்திற்கு மேற்பட்டதா?" என்று கேள்வியெழுப்பி, தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை டேக் (tag) செய்துள்ளார்.

ட்விட்டர் இந்தியா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரவி சங்கர் பிரசாத்தையும், அரசையும் பல நெட்டிசன்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். "ட்விட்டர் இந்தியா, அப்படியானால் உங்களைப் பொறுத்தமட்டில் 'லே' சீன மக்கள் குடியரசின் பகுதி," என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். "தயவுசெய்து இந்த விஷயத்தை கருத்தில் கொண்டு ட்விட்டர் இந்தியா மீது சரியான நடவடிக்கை எடுங்கள். சமூக ஊடக பெருநிறுவனங்களை தங்கள் முட்டாள்தனத்திற்கு பொறுப்பேற்க வைப்பதற்கு இதுவே சரியான நேரம்," என்று ஒரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார். "இந்த விஷயத்தின் தீவிரத்தை கருதி ட்விட்டர் இந்தியா மீது ஏற்ற நடவடிக்கை எடுங்கள். இந்திய இறையாண்மையை அவர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது," என்று ட்விட்டர் பதிவர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

More News >>