கொரோனா 2ம் அலை.. சாத்தியக்கூறுகளை அடுக்கும் வி.கே. பால்!
கொரோனா தொற்று இந்தியாவை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு வரும் நிலையில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா உச்சம் தொட்டு வருகிறது.
இதற்கிடையே, கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் ஒருங்கிணைப்பு நிபுணர் குழுவின் தலைவராக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே. பால் இருந்து வருகிறார். இவர், இன்று `` கொரோனா தடுப்பு மருந்துகள் கிடைத்தவுடன், அவற்றை உடனடியாக எந்த தாமதம் இல்லாமல் வழங்க முடியும். இந்தியாவில் கடந்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை சரிவடைந்து வருகின்றன. எனினும், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனினும், ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உயரும் சூழல் காணப்படுகிறது. இந்தியாவில் 2வது கொரோனா பாதிப்பு அலை ஏற்படும். அதற்கான சாத்தியகூறுகள் இருப்பதை மறுக்க முடியாது. நாம் இன்னும் வைரஸை பற்றி அறிந்து கொள்ளும் நிலையிலேயே இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.