பிள்ளைக்குப் பெயரிட்டால் ஃப்ரீயாக கிடைப்பது எது தெரியுமா?

18 ஆண்டுகள் கட்டணமில்லாத இணையசேவை பெறுவதற்காக தங்கள் மகளுக்கு அந்நிறுவனத்தின் பெயரைப் பெற்றோர் இட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இணையசேவை நிறுவனம் டிவைஃபை (Twifi). இந்நிறுவனம் குழந்தைக்குப் பெயரிடுவது குறித்து ஒரு விளம்பரம் செய்திருந்தது. அதில் தங்கள் பிள்ளைகளுக்கு 'டிவைஃபையஸ்' (Twifius) அல்லது 'டிவைஃபையா' (Twifia) என்று பெயரிடுவோருக்கு 18 ஆண்டுகளுக்குக் கட்டணமில்லாத இணையசேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

குழந்தையின் பிறப்புச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்தால் உரியப் பரிசீலனைக்குப்பிறகு கட்டணமில்லாத இணையசேவை வழங்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

30 மற்றும் 35 வயதான ஒரு தம்பதி தங்கள் மகளுக்கு 'டிவைஃபையா' என்று பெயரிட்டுள்ளனர். தங்கள் பெயரை வெளியிடவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர்கள், கட்டணமில்லாத இணைய சேவையின் மூலம் மிச்சமாகும் பணத்தை தங்கள் மகளின் பெயரில் வங்கிக்கணக்கு ஆரம்பித்து அதில் சேமிக்க இருப்பதாகவும் அவள் ஓட்டுநர் உரிமம் பெறும் வயது வரும்போது கார் வாங்குவதற்கு அப்பணத்தைப் பயன்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

More News >>